
Tamil - GIT 2018 Mock Examination
சட்டவிரோதமாக பிரதியெடுத்தல், விநியோகித்தல், மென்பொருள்களை உரிமை கோரல் என்பன
களவு (piracy)
தீச்சுவர்
தனிப்பட்டது (privacy)
பௌதிக பாதுகாப்பு
தசம எண் 57 இன் துவிதச் சமவலு யாது?
Select one:
111001
111011
110001
101001
ஒரு பணிசெயல் முறைமையில் பயனர் கணக்குகள் தொடர்பான பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
A- ஒவ்வொருவரும் ஒரு பயனர் பெயருடனும் கடவுச் சொல்லுடனும் தனது பயனர் கணக்கினை அணுக முடியும்.
B- பயனர் கணக்கு என்பது அணுகக் கூடிய கோப்புகளையும் கோப்புறைகளையும் பற்றிக் குறிப்பிடுவதும் கணினியில் பயனரின் விருப்பத்திற்கேற்ப மாற்றப்படத்தக்க அமைப்புகள் (setting) பற்றிக் குறிப்படுவதுமான தகவல்களின் தொகுப்பாகும்.
C- பலருடன் ஒரு கணினியைப் பகிர்ந்து கொள்வதற்குப் பயனர் கணக்கு உம்மை அனுமதிப்பதில்லை.
Select one:
A, B ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
இலக்கமுறை வரைவியலின் பௌதிக பரிமாணம் எனப்படுவது?
Select one:
படமூலம்
அளவு
பாிதிறன்
வர்ணம்
கீழே காட்டப்பட்டுள்ள வழியில் (Path) உள்ள கோப்பின் பெயர் எது?
c:\my documents\download\my songs\flow.mp3
Select one:
.mp3
my songs
flow
c:\
பின்வருவனவற்றில் மின்னஞ்சல் முறைமையிலுள்ள கொடா கோப்புறைகள் (default folder) எது?
Select one:
Inbox, Received, Draft, Sent
Inbox, Delete, Sent , Trash
Inbox, Draft, Sent, Save
Inbox, Draft, Sent, Trash
நீர் உமது பாடசாலையின் வகுப்பறைகளையும் ஆய்வுகூடங்களையும் வலையமைப்பாக்குவதற்குத் திட்டமிட்டால் நடைமுறைப்படுத்த வேண்டிய மிகப்பொருத்தமான வலையமைப்பு வகை எது?
Select one:
VPN
LAN
MAN
WAN
பின்வருவனவற்றுள் கணினியின் மைய முறைவழி அலகின் (CPU) கூறுகள் எவை?
Select one:
எண்கணித தர்க்க அலகு (ALU), துணைத் தேக்ககம் (secondary storage)
கட்டுப்பாட்டு அலகு(control unit), பிரதான நினைவகம் (main memory)
பிரதான நினைவகம் (main memory), துணைத் தேக்கம்(secondary storage)
எண்கணித தர்க்க அலகு (ALU), கட்டுப்பாட்டு அலகு (control unit)
பணிசெயல் முறைமை தொடர்பாக பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
A - கணினியை ஆரம்பிக்கும் செய்நிரல் (Program)
B - கணினியின் வளங்களை முகாமை செய்யும்
C - இதன் பிரதான தொழிற்பாடானது உரிமையல்லாத அணுகலிலிருந்து கணினியை பாதுகாத்தல்
மேற்குறித்த கூற்றுகள் சரியானது/சரியானவை எது/எவை?
Select one:
A, C ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
A, B ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
பின்வருவனவற்றுள் கருத்துத் திருட்டு (plagiarism) என்பதற்கு உதாரணம் எது?
Select one:
இணையத்தளத்திலிருந்து ஒன்றைப் பிரதிசெய்து அதனை உங்கள் ஆவணத்தில் உரிய உதவிகளுடன் செருகுதல்
உங்களது சொந்த வேலையை அடிப்படையாகக் கொண்ட முன்வைப்பொன்றை உருவாக்குதல்
வேறொருவரினால் தயாரிக்கப்பட்ட ஆவணத்தை தனது ஆவணமாக முன்வைத்தல்
பந்தியொன்றை நிகழ்நிலையில் (online) வாசித்து அதனை தனது சொற்களில் மீண்டும் எழுதுதல்
பின்வருவனவற்றுள் ஔியியல் தேக்கச் சாதனங்களை மாத்திரம் கொண்ட தொகுதி யாது?
Select one:
Hard disk, DVD, CD
Blu-Ray Disc, CD, DVD
CD, DVD, Flash drives
DVD, Blu-Ray Disc, Tape
பின்வருவனவற்றைக் கருதுக:
A - உட்கட்டமைப்பு சேவை
B - மேடைச் சேவை
C - மென்பொருள் சேவை
மேற்குறித்தவற்றுள் முகில் கணினிப்படுத்தலின்(cloud computing) பிரதான சேவைகள் ஆவன
Select one:
B, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
A, C ஆகியன மாத்திரம்
A, B ஆகியன மாத்திரம்
இலத்திரனியல் தொடர்பாடலில் நம்பகப் பொருள் போன்று தோன்றி உணர்திறனான தகவல்களைப் பெற்றுக் கொள்வதது
Select one:
hacking ஆகும்
adware ஆகும்
phishing ஆகும்
privacy ஆகும்
பின்வருவனவற்றைக் கருதுக.
A- கணினிச் சாதனம்
B- இணையச் சேவை வழங்குநர் (ISP)
C- மொடம்
D- தொலைபேசி இணைப்பு
மேற்குறித்தவற்றில் எவை இணையத்தை அணுகுவதற்கான சேர்க்கையாகும்?
Select one:
A, B, D ஆகியன மாத்திரம்
A, B, C, D ஆகிய எல்லாம்
A, B, C ஆகியன மாத்திரம்
B, C, D ஆகியன மாத்திரம்
பின்வருவனவற்றில் கட்டளைவரி இடைமுகம் மட்டும் கொண்ட இயக்க முறைமை எது?
Select one:
Ubuntu
DOS
Ms Windows
Mac OS
நிறுவனமொன்று சொல்முறை வழிப்படுத்தல் மென்பொருள் (X) ஐ கடையொன்றிலிருந்து கொள்வனவு செய்தது. அதே நிறுவனம் தனது கணக்கு வைப்பு நடவடிக்கைகளுக்காக கணக்கு வைப்பு மென்பொருள் (Y) ஐ வடிவமைத்துத் தருமாறு மென்பொருள் வடிவமைப்புக் கம்பனியிடம் கேட்கப்பட்டது.
மேற்குறிப்பிட்ட சூழ்நிலையில் உண்மையானது பின்வருவனவற்றுள் எது?
Select one:
X, Y ஆகிய இரண்டும் தேவைக்கேற்ப தயாரிக்கப்பட்ட மென்பொருள்களாகும்
X, Y ஆகிய இரண்டும் பொதி செய்யப்பட்ட மென்பொருள்களாகும்
X பொதி செய்யப்பட்ட மென்பொருள் ஆவதோடு Y என்பது தேவைக்கேற்ப தயாரிக்கப்பட்ட மென்பொருளாகும்.
X தேவைக்கேற்ப தயாரிக்கப்பட்ட மென்பொருள் ஆவதோடு Y பொதி செய்யப்பட்ட மென்பொருளாகும்
ஒரு தர்க்க வாயிலுக்கு ஒப்பான செயலைக் கொண்ட கீழே தரப்பட்ட சுற்றினைக் கருதுக.

மேலேயுள்ள சுற்று தொடர்பான சரியான கூற்று / கூற்றுகள் எது / எவை?
A - ஆளி X இனை மூடும் போது (ON) மின்குமிழ் ஒளிரும்.
B - X, Y ஆகிய இரண்டு ஆளிகளையும் மூடும்போது (ON) மின்குமிழ் ஒளிரும்.
C - ஆளி X இனைத் திறந்து (OFF), ஆளி Y இனை மூடும்போது (ON) மின்குமிழ் ஒளிரும்.
Select one:
A, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
A, B ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
கீழேயுள்ள உண்மை அட்டவணையைக் கருதுக:
மேலேயுள்ள உண்மை அட்டவணையை வகைகுறிக்கும் தர்க்க வாயில்/ வாயில்கள் எது/ எவை?
Select one:
இணையம் மற்றும் கணினிகளில் ஏற்படும் அச்சுறுத்தல்களை தீர்ப்பதற்கு உதவும் நிறுவனம்
Select one:
Ministry of Education
Computer Resource Center
Sri Lankan Computer Emergency Readiness Team
ICT Agency
வரவு வரைகலைகளின் பிரிதிறன் அளக்கப்படுவது
Select one:
ஒரு அடியின் புள்ளிகள் (Dots Per foot) மூலமாகும்.
ஒரு செ.மீ. புள்ளிகள் (Dots Per cm) மூலமாகும்.
ஒரு அங்குலத்தின் புள்ளிகள் (Dots Per inch) மூலமாகும்.
ஒரு மி.மீ. புள்ளிகள் (Dots Per mm) மூலமாகும்.
பின்வருவனவற்றில் எது நீண்ட நேரத்துக்கு கணினியுடன் பணியாற்றும் போது ஏற்படும் சுகாதாரப் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு விதந்துரைக்கப்பட்டுள்ளது?
Select one:
ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒரு தடவையும் ஓய்வெடுத்தல்
அதிக மகிழ்ச்சிகரமான கணினி விளையாட்டுக்களில் ஈடுபடுதல்
சுட்டியிலும் பார்க்கச் சாவிப்பலகையை அடிக்கடி பயன்படுத்தல்
சிறிய திரையுள்ள கணினியைப் பயன்படுத்தல்
நிகழ்நிலைக் கொள்வனவு (online shopping) தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
A - அது கொள்வனவுக்காகச் செலவிடப்படும் பயண நேரத்தை மீதப்படுத்துகின்றது.
B - வாடிக்கையாளர்கள் ஒரு பொருளை வாங்கும் முன்னர் அதனைப் பௌதிக ரீதியாக பரிசோதிக்க முடியாது.
C - வாடிக்கையாளர்கள் மலிவான பொருள்களை எளிதாகக் கண்டு கொள்ளலாம்.
மேற்குறித்த கூற்றுகளில் நிகழ்நிலைக் கொள்வனவு பற்றிய சரியான கூற்றுகள் யாவை?
Select one:
B, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
A, B ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
நுண் அலை, செந்நிறக்கீழ் அலை மற்றும் வானொலி அலை என்பவை ............................................................... என்பதற்கு உதாரணமாகும். மேலுள்ள இடைவௌிக்குப் பொருத்தமானது பின்வருவனவற்றில் எது?
Select one:
வழிப்படுத்தப்பட்ட ஊடகம்
வழிப்படுத்தப்படாத ஊடகம்
பிணைக்கப்பட்ட ஊடகம்
பாதுகாக்கப்படாத ஊடகம்
வெற்றிடங்களைக் கொண்ட பின்வரும் பந்தியைக் கருதுக.
தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லிகளினால் ஏற்படும் பாதிப்புகளைக் கண்டறியுமாறு மொகமட்டிடம் கேட்கப்பட்டது. அவர் கணினியின் முன்பாக அமர்ந்து இணையத்தை அடைவதற்காக ....(A).... ஐ ஆரம்பித்து அதனூடாக ....(B).... ஐ செயற்படுத்தினர். பின்னர் ...(C).... இல் "தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லிகளினால் ஏற்படும் பாதிப்புகள்" எனும் சொற்றொடரைத் (text) தட்டச்சிட்டார்.
மேலுள்ள வெற்றிடங்களை நிரப்ப மிகப் பொருத்தமானவை முறையே பின்வருவனவற்றுள் எவை?
Select one:
A = வலை மேலோடி, B = தேடுதல் பெட்டி, C = தேடல் இயந்திரம்
A = தேடல் இயந்திரம், B = தேடுதல் பெட்டி, C = வலை மேலோடி
A = வலை மேலோடி, B = தேடுதல் இயந்திரம், C = தேடுதல் பெட்டி
A = தேடுதல் பெட்டி (search box), B = தேடல் இயந்திரம் (search engine), C=வலை மேலோடி (web browser)
பின்வருவனவற்றைக் கருதுக.
A - கார்பல்டன்னல் நோய்க்குறி (Carpel Tunnel Syndrome)
B - முழங்கை நோவு (Elbow pain)
C - பார்வை நோய்க்குறி (Vision Syndrome)
மேலுள்ளவற்றில் மீள் அழுத்த காயம் என்பதுடன் தொடர்புபட்டது/வை எது/எவை?
Select one:
A, B, C ஆகிய எல்லாம்
A, C ஆகியன மாத்திரம்
A, B ஆகியன மாத்திரம்
A மாத்திரம்
உங்கள் கணினியை அங்கீகாரமற்ற தொலை அணுகலிலிருந்து (remote access) பாதுகாக்கப் பயன்படுத்தத்தக்க மிகப் பொருத்தமான கருவி யாது?
Select one:
வைரஸ் வருடி (virus scanner)
ஆளி (Switch)
தீச்சுவர் (fire wall)
ஸ்பாம் எதிர் மென்பொருள் (anti-spam software)
அன்னாசிப்பழம் ஒன்றின் விலை ரூபா 160/= மற்றும் மாம்பழம் ஒன்றின் விலை ரூபா 40/= ஆகும். இவ்விரு பழங்களினதும் விலையின் மொத்தத்தை இரும வடிவில் குறிப்பது
Select one:
10001000
11001000
11011000
11011010
பின்வருவனவற்றுள் வலை மேலோடி தொடர்பான சரியான கூற்று எது?
Select one:
இது ஒரு முறைமை மென்பொருளாகும்
வலைப்பக்கங்களைப் பார்ப்பதற்கும் வலைப்பக்கங்களுடன் ஊடுருவுவதற்கும் பயனருக்கு வசதியளிக்கின்றது.
இது ஒரு பயன்படு மென்பொருளாகும்
Html பக்கங்களை வாசித்தறிய முடியாதவை
நீண்டநேரம் கணினியைப் பாவிப்பதால் கண் பாதிக்கப்பட்டு (eye strain) அது மங்கலான பார்வையையும் தலைவலியையும் ஏற்படுத்தும். கண்பாதிப்பைக் குறைப்பது பின்வருவனவற்றுள் எவை?
A - கணினித் திரையின் ஒளிர்வினதும் வேறுபடும் தன்மையினதும் (brightness & contrast) அளவை உச்ச அளவிற்கு அமைத்தல்.
B - கணினிப் பாவனையின் போது கிரமமான இடைவேளை எடுத்தல்.
C - பொருத்தமான அளவு வெளிச்சத்தைப் பயன்படுத்தலும் கண்ணைக் கூசச் செய்யும் பிரகாசமான வெளிச்சத்தைத் தடுக்க யன்னல் திரைகளைப் பயன்படுத்தலும்.
Select one:
A, B ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
B, C ஆகியன மாத்திரம்
முதலாம் தலைமுறைக் கணினிகள் தொடர்பாக பின்வருவனவற்றுள் சரியான கூற்று / கூற்றுகள் எது / எவை?
A - கணினியின் பொளதிக அளவு ஒப்பீட்டு அளவில் பெரியது.
B - சுற்றுகளுக்காக வெற்றிடக் குழாய்கள் (vacuum tubes) பயன்படுத்தப்பட்டன.
C - செய்நிரலுக்காக (programming) இயந்திரமொழி (machine language) பயன்படுத்தப்பட்டது.
Select one:
A, B, C ஆகிய எல்லாம்
A, C ஆகியன மாத்திரம்
B மாத்திரம்
A மாத்திரம்
பின்வரும் மெய் அட்டவணையைக் கருதுக:

மெய் அட்டவணையின் வருவிளைவு பெறப்படுவது எதன் மூலம்?
Select one:
NOT (X OR Y)
NOT (X AND Y)
X OR Y
X AND Y
பின்வருவனவற்றில் 'Raster' படிமக் கோப்பு வடிவமைப்புகளைக் கொண்ட தொகுதி எது?
Select one:
AI, EPS, SVG
TIFF, JPEG, GIF, PXC, BMP
TIFF, JPEG, GIF, PCX, BMP
AI, EPS, SVG, PDF
தன்னியக்கக் காசளிப்பு பொறியின் (ATM) பணத்தை மீளப்பெறுதல் தொடர்பாகப் பின்வருவனவற்றைக் கருதுக.
A- ATM அட்டை, இரகசிய எண்ணை உள்ளீடு செய்தல்
B - பணம், பற்றுச் சீட்டு
C - போதிய பணம் உள்ளதா எனச் செவ்வை பார்த்தல்
பின்வருவனவற்றில் எது முறையே உள்ளீடு, செயன்முறை, வெளியீடு ஆகியவற்றைச் சரியாக வகைகுறிக்கின்றது?
Select one:
A, C, B
B, A, C
A, B, C
C, A, B
வருவிளைவு 1 ஆக அமைந்துள்ள இச்சுற்றின் A, B ஆகிய உள்ளீடுகளாக அமைவது,

Select one:
1,0
1,1
0,1
0,0
ஒரு சமூக ஊடக வலையத்தளத்தில் சந்தித்த ராஜன் என்ற நண்பனைச் சந்திப்பதற்கு செல்வதாக அருணனிடம் கமல் கூறுகின்றார். ராஜனைச் சந்திப்பதற்கு முன்னர் பின்வரும் விடயங்களைச் செய்யுமாறு கமலிடம் அருண் கேட்கின்றார்.
A- சமூக ஊடக வலையத்தளத்தில் தரப்பட்டுள்ள ராஜனின் தனிநபர் தகவலைச் செவ்வைபார்த்தல்.
B- ஒரு சமூக ஊடக வலையத்தளத்தில் சந்தித்த ஒரு புதிய நண்பரைச் சந்திப்பதற்குச் செல்வதாகக் கமலின் பெற்றோருக்கு அறிவித்தல்.
C- சந்திப்பதற்காகக் கமலின் வேறொரு நண்பனை வரவழைத்தல்.
கமலின் சொந்தப் பாதுகாப்புக்காக மேற்குறித்த கூற்றுகளில் எவை நியாயமாகப் பின்பற்றப் படத்தக்கவை?
Select one:
A, B, C ஆகிய எல்லாம்
A, B ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
பின்வரும் பிரயோகப் பொதிகளைக் கருதுக.
A-தரவுத்தள பொதிகள்
B- முன்வைப்புப் பொதிகள்
C- விரிதாள் பொதிகள்
மேற்குறித்தவற்றில் எவை தரவுகளைத் தேக்கி வைத்து முறைவழியாக்கப் (process) பயன்படுத்தப்படலாம்?
Select one:
A, B ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
B, C ஆகியன மாத்திரம்
பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
A- MS-DOS என்பது கட்டளை நிரை இடைமுகத்தைப் (CLI) பயன்படுத்தும் பணிசெயல் முறைமைகளாகும்.
B- இசுறு லினக்ஸ், ஹன்தான லினக்ஸ் என்பன இலங்கையர்களால் தேசிய மயமாக்கப்பட்ட இரு திறந்த பணிசெயல் முறைமைகளாகும்.
C- மைக்கிரோசொப்ற் வின்டோஸ் என்பது வரைவியல் பயனர் இடைமுகம் (GUI) இல்லாத பணிசெயல் முறைமைகளாகும்.
மேற்குறித்த கூற்றுகளில் சரியானவை யாவை?
Select one:
A, B ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
பின்வரும் சேர்மானங்களில் எது இணையத்தின் சேவைகளை மாத்திரம் காட்டுகின்றது?
Select one:
HTTP உம் கோப்பு மாற்றமும்
மின்னஞ்சலும் HTTP உம்
மின்னஞ்சலும் வலை மேலோடியும்
மின்னஞ்சலும் கோப்புப் பரிமாற்றமும்
தடைப்படாத வலு வழங்கல் (UPS) அலகு கணினி முறைமைகளின் வன்பொருள் மட்டத்தின் பாதுகாப்பினை வழங்குவதற்குப் பயன்படுத்தலாம். UPS அலகின் தொழிற்பாடு தொடர்பாக பின்வருவனவற்றுள் சரியானது எது / எவை?
A-மின்வலு சடுதியாக இல்லாது போதல், வலு மாற்றங்கள் ஆகிய இடர்களிலிருந்து கணினி முறைமைகளைப் பாதுகாத்தல்
B-கணினி நச்சு நிரல்களிலிருந்து கணினி பாதுகாத்தல்
C-வெளிநபர்கள் அனுமதியின்றி கணினியினுள் பிரவேசிப்பதிலிருந்து கணினி முறைகளைப் பாதுகாத்தல்
Select one:
A மாத்திரம்
A, B, C ஆகியன எல்லாம்
A, B ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
பின்வருவனவற்றில் இணையத்தினால் வழங்கப்படும் சேவைகளைக் குறிப்பது எது?
Select one:
LAN, WAN
தேடல்பொறி, பெரும்பரப்பு (WAN)
மின்னஞ்சல்,குறும்பரப்பு வலையமைப்பு (LAN)
மின்னஞ்சல், உலகளாவிய வலை
No comments:
Post a Comment